கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து - 300 அடி பள்ளத்தில் சிக்கிய 4 பேர்!!மீட்பு பணி தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் அந்த தனியார் கல்குவாரியில் உள்ளது. இங்கு நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.மழை காரணமாக இந்த பாறைகள் உடைந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் உட்பட 6 பேர் இதில் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் மேலே இருந்த ஊழியர்கள் மூலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு உடனே வந்த ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உள்ளே இருக்கும் பாறைகள் அகற்றப்பட்டு அதன் மூலம் மீட்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கல்குவாரியில் 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Tags: தமிழக செய்திகள்