சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழை- சென்னை வானிலை ஆய்வுமையம்
வங்ககடலில் நிலவும் அசானி புயல் வலுவிழந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது, மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மழை பெய்யும் எனவும்,இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Tags: தமிழக செய்திகள்