Breaking News

12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 கோவை , மதுரை , நாகர்கோயில் மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட 7 ஐ ஏ எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


 

 

  தமிழகத்தில் 6 மாநகராட்சி ஆணையர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 

கோவை மாநகராட்சி ஆணையராக பிரதாப் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக வைத்தியநாதன் ஐஏஸ்நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருநெல்வேலி கார்ப்பரேஷன் கமிஷனராக சிவகிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

நாகர்கோவில் மாநகராட்சி கமிஷ்னராக ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ஆவடி மாநகராட்சி ஆணையராக IAS தர்பகராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்

அதேபோல்  சென்னை: திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில் உட்பட 6 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கராவ் ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback