Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹1,000-ஐ தாண்டியது! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

அட்மின் மீடியா
0

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனையானது.  இந்நிலையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

ஏற்கனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback