Breaking News

சென்னையில் பரபரப்பு....100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 13 கோடி ரூபாய் -முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 13 கோடி ரூபாய் - 100 பேரின் வங்கிக்கணக்குகளை முடக்கியது எச்.டி.எப்.சி

 


சென்னை திநகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது.வாடிக்கையாளர் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அதிகாரிகள் வங்கிக் கணக்குளை சரிபார்த்தபோது, 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக வங்கி ஊழியர்கள் பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும்  முடக்கியுள்ளனர். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு தவறான குறுந்தகவல் சென்றதாக HDFC வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும், நடந்த தவறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது..

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback