Breaking News

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர ஜூலை 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ... முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாலிடெக்னிக் முதலாமாண்டு படிப்புகளில் சேர ஜூலை 1-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்


சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 

பாலிடெக்னிக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இணையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலாமாண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது தொடங்கும் . பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேர்ப்பதற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.  



முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான செய்தித்தாள் விளம்பரம் 30.6.2022 அன்று வெளியிடப்படும். முழுநேரம், பகுதிநேரம் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் பதிவு 1.7.2022 அன்று தொடங்கி 15.7.2022 அன்று முடியும்.

முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் 22.7.2022 அன்று நடைபெறும். கல்வி நிறுவனங்களிடம் இருந்து பி-பாரம் பெறும் இறுதித் தேதி 29.7.2022 ஆகும்.

நேரடியாக பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு கல்வியில் சேர விரும்புவோருக்கு (ஆன்லைன்) செய்தித்தாள் விளம்பரம் 22.6.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் பதிவு 23.6.2022 அன்று தொடங்கி 8.7.2022 அன்று முடியும் எனவும்

மேலும் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும். பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback