1 முதல் 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!l
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்றும், விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்