Breaking News

புதிய வகை ஒமிக்ரான் XE கொரோனா இந்தியாவில் இல்லை – மத்திய அரசு தகவல்

அட்மின் மீடியா
0

தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனா அறிகுறி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது


மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.சந்தேகத்திற்குரியவரின் மாதிரியை ஆய்வு செய்ததில் அது XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனாவின் அறிகுறிகளோ,இணை நோய்களோ இல்லை எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

மேலும் ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த எக்ஸ்இ வைரஸ் ஒமைக்ரானின் முந்தைய திரிபான BA2வை விட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. சீனா , இங்கிலாந்து , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback