ஏப்ரல் 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை.....முழு விவரம்
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது ஆகும் மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் திருத்தேரோட்டம் என்பது நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி, ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து, ஆணை வழங்கப்படுகிறது.இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக, மே 14- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இல் கீழ் வராது என்பதால், மாவட்டக் கருவூலம், அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.
Tags: தமிழக செய்திகள்