Breaking News

ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம்!! ஹஜ் பயண கட்டுப்பாடுகள் என்ன என்ன முழு விவரம்...

அட்மின் மீடியா
0

மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு தனது 09.04.2022 ஆம் நாளிட்ட சுற்றிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளது









சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி இந்த ஆண்டில் (ஹஜ் 2022) ஹஜ் பயணம் கீழ்க்காணும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும்

  • சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற 65  வயதிற்குட்பட்டவர்கள்.
  • ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சான்று உடையவர்கள்.
  • மேலும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஹஜ் பயணத்தில் தவறாது கடைபிடிக்கவேண்டும் எனவும் சவூதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

30.4.2022 அன்றுள்ளவாறு 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் ஹஜ் 2022-ற்கு தகுதியற்றவராவர், 

இதனால், பெண் பயணிக்கு ஆண் வழிதுணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த மெஹ்ரம் விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள். 

இந்த அறிவிப்பால் 70+ வகையில் துணை பயணியாக விண்ணப்பித்தவரும் பாதிக்கப்படுவர்.

இந்திய ஹஜ் குழு வெளியிட்ட 09.04.2022 நாளிட்ட சுற்றாணையில் ஹஜ் 2022-க்காக புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் 9.4.2022 முதல் 22.4,2022 வரை கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்;

  • 22.04.2022 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 31.12.2022 வரை செல்லத்தக்க இயந்திரம் படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். 
  • 30.04.2022 அல்லது அதற்கு முன்னர் 65 வயதை பூர்த்தி செய்யாத சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தியிருத்தல் வேண்டும்.
  • வயது தகுதியின்மை காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்திற்கு புதிதாக ஆண் வழித்துணையாக விண்ணப்பிக்கலாம்.
  • ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

தற்போது சவூதி அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க விரும்பாதவர்கள் ஹஜ் 2022-க்கான விண்ணப்பங்களை திரும்பப் பெறலாம். மேலும், ரம்ஜான் மாதத்தின் உம்ரா ஏற்பாடு மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு சவூதி அரசாங்கம் சுகாதாரம் மற்றும் நிர்வாக தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
என அதில் கூறப்பட்டுள்ளது
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க


 
விண்ணப்பிக்க கடைசி தேதி 

22.04.2022


தொடர்புக்கு

044-28252519

044-28227617

022-22107070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

ஹஜ் கமிட்டி முகவரி

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் 
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback