மலைப்பாதையில் பைக்கில் சுற்றுலா சென்ற நபர் மீது பாறை விழுந்து ஒருவர் பலி- அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் சென்றனர்.
இதில் அபினவ் (20) மற்றும் அனீஷ் (26) ஆகியோர் சென்ற பைக் மீது ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே 250 மீட்டர் உயரத்தில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியது.
பாறை மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத்தில் விழுந்தனர்,
இதில் அபினவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அனீஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கில் செல்லும் போது மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறைக்கல் மோதி இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின் பகுதியில் இருந்தவரையும் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த மாதம் 16ம் தேதி நடந்த இந்த விபத்தின் காட்சிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/rsakthivelsubu/status/1519933724057804800
Tags: தமிழக செய்திகள்