Breaking News

சவுதியில் ரமலான் பிறை தென்பட்டது - வளைகுடா நாடுகளில் நோன்பு ஆரம்பம்

அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களின் முக்கிய மாதங்களில் ஒன்று ரமலான் மாதம்,அந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் 30 நாட்கள் நோன்பு பிடித்து வருவார்கள். புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் காணப்பட்டதாக அறிவித்துள்ளனர். சவுதியில் ரமலான் பிறை தென்பட்டது - வளைகுடா நாடுகளில் நாளை 02.04.2022  ரமலான் முதல் நாள்



இன்று ( 01.04.2022 ) வெள்ளிக்கிழமை சவுதியில் மஹ்ரிபிற்குப் பிறகு ரமலான் முதல் பிறை தென்பட்டுள்ளது  என அதிகாரப் பூர்வமாக அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

எனவே இன்று ஏப்ரல் 1 ஷாபான் மாதத்தின் இறுதி நாள் ஆகும், எனவே நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு

சவூதி அரேபியாவின் பல்வேறு இடங்களில் ரமலான் பிறை காணப்பட்டுள்ளது, ஹரமைன் ஷரிஃபைன், செய்தி வெளியீட்டின் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது.

அரேபியா,பஹ்ரைன்,குவைத்,துபாய்,கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback