தமிழக பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழக பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ/மாணவிகள் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கலையக்கூடிய நோக்கில் 1960-ம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை, மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவமாணவிகள் அணிந்து வருகின்றனர். இது சீருடை விதிகளுக்கு எதிரானது என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மை ஏற்படுவதை தடுக்கவும் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை போல தமிழகத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கோபிநாத் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி