Breaking News

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

அட்மின் மீடியா
0

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை 22.04.2022 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

                                                

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது, அதன்படி 

10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும்

11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 

12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி- 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் 

10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும்

11ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும்

12ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும்,  தேர்வு முடிவுகள் வெளியாகும். என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை ( ஹால் டிக்கெட்) நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது. 


ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-


10 ம் வகுப்பு ஹால்டிக்கெட்

https://apply1.tndge.org/private-hall-ticket-revised


11 ம் வகுப்பு ஹால்டிக்கெட்

https://apply1.tndge.org/private-hall-ticket-revised

12 ம் வகுப்பு ஹால்டிக்கெட்

https://apply1.tndge.org/private-hall-ticket-revised

மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில், மேற்கண்ட இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தாங்கள் பயிலும் வகுப்பு விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

பின்னர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயனர் எண் மற்றும் பிறந்த தேதி  கொண்டு உள்நுழைந்து, தங்களின் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback