Breaking News

TNPSC குருப் 4 அறிவிப்பு என பரவும் தகவல் உண்மையில்லை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு 
செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி-IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback