Breaking News

சட்டம் படிக்க ஆசையா? CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பியுங்கள் ... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

சட்ட படிப்பு படித்து வழக்கறிஞர் ஆவது பலருக்கும் ஆசையாக இருக்கும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையையும் அங்கீகாரங்களையும் பெற்றுத்தரும் சட்டப் படிப்புகளை தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டியது அவசியமாகும்

 



சட்ட பொது நுழைவுத் தேர்வு என்றால் என்ன:-

இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மற்றும் 40க்கு அதிகமான கல்வி நிறுவனங்களில் சட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க CLAT தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். 

 

கல்வி தகுதி:-

B.A., LL.B (Hons) 

 B.Com., LL.B (Hons) 

ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும், 

LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கான பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Law Admission Test - CLAT) விண்ணப்பிக்கலாம்

 

நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள்:

இளநிலைச் சட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

முதுநிலைச் சட்டப்படிப்புக்கு LL.B அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை

 

விண்ணப்பிக்க:-

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க https://consortiumofnlus.ac.in/clat-2022/

 

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:  09.05.2022

நுழைவு தேர்வு நடைபெறும் நாள்:19.06.2022

மேலும் விவரங்களுக்கு:-

நுழைவு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையைப் பெறமுடியும். 

மாணவர் சேர்க்கை பெற விரும்பும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் குறித்த முழுமையான தகவல்கள், மாணவர் சேர்க்கைத் தகவல்கள், கல்விக் கட்டணம், தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் போன்ற தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

https://consortiumofnlus.ac.in/clat-2022/

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback