பஹ்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு..இளவரசி கடும் கண்டனம்..!
அட்மின் மீடியா
0
பஹ்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு.. அமீரக இளவரசி கடும் கண்டனம்..!
பஹ்ரைன் நாட்டில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்திற்கு அமீரக பிரபல எழுத்தாளரும், இளவரசி என அறியக்கூடியவரும் Hend bint Faisal Al-Qasimi அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அடிலியா பகுதியில் லாண்டர்ன்ஸ் எனும் உணகத்திற்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணை அங்கிருந்த மேலாளர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளார். இதனை அடுத்து அப்பெண் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம் 15இன் படி உணவகத்தை மூடி சீல் வைத்தது.
உணவகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,
இஸ்லாமிய நாட்டில் இனவெறி வரவேற்படமாட்டாது” என்றும் ஹேஷ்டேங் #Islamophobia என்றும் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டர் பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்