Breaking News

இனி ரேஷன் பொருட்கள் பெற ஆதார் எண் போதும்..இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதிதாக இடம் மாறி செல்பவர்கள் ரேஷன் அட்டைகளை மாற்றவோ, புதிய அட்டைகளை வாங்கவோ தேவையில்லை எனவும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற ஆதார் எண்ணே போதும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

 


இது தொடர்பாக,பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவையின் கேள்வி நேரத்தின்போது நேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 

மத்திய அரசானது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் அண்டை மாநிலங்கள் அல்லது ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை தீக்கும் பொருட்டுமத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்லது

அந்த வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்த திட்டத்தின் மூலம்,ஒரு புலம்பெயர் தொழிலாளி, தான் எங்கு வேலைக்கு செல்கிறாரோ அந்த ஊரில் தனக்குரிய ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.அதே சமயத்தில்,அவருடைய குடும்பத்தினர்,அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்களுக்குரிய ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே,வேலைக்காக வேறு ஊர்களுக்கு செல்லும்போது,அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை.மாறாக, தங்களது ரேஷன் கார்டின் எண் அல்லது ஆதார் எண்ணை ரேஷன் கடையில் தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback