சவூதியின் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஏமன் ஹவுதி போராளிகள் ஏவுகனை தாக்குதல்..!! வீடியோ!!
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்து ஏமனின் ஹவுதி போராளிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இத்தாக்குதல்களால் ஓரிடத்தில் மட்டும் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சவூதி அரேபியாவின் அராம்கோ எரிவாயு நிலையம், மேலும் செங்கடல் துறைமுகத்தில் உள்ள பெட்ரோ கெமிக்கல்
வளாகம், தென்மேற்கில் உள்ள ஒரு மின் நிலையம், தெற்கு எல்லை நகரமான
ஜிசனில் உள்ள எண்ணெய்க் கிடங்கு, மற்றும் தெற்கு நகரமான காமிஸ் முஷைட்டில் உள்ள
எரிவாயு நிலையம் ஆகியவற்றில் யேமன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஆளில்லா விமானம்
மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும் இந்தத்
தாக்குதல்களால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அருகில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன’ என்று சவூதி தலைமையிலான ராணுவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஹவுதி போராளிகள் நடத்திய இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் ஏமனின் ஹவுதி போராளிகள் நடத்திய ஏவுகனை தாக்குதலில் சிலவற்றை சவூதி தலைமையிலான கூட்டணி
இடைமறித்து அழித்ததாக சவூதி
அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA, ஹவுதிகளால் ஏவப்பட்ட
ஏவுகணைகளை இடைமறிக்கும் வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்