இரண்டு வருடங்களுக்குப் பின் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் மலேசியா..!!
அட்மின் மீடியா
0
மலேசியாவில் குறைந்து வரும் கொரோனா பரவலை அடுத்து ஏப்ரல் 1 முதல் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கவிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020 முதல் மலேசியா, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பராமரித்து வருகிறது.
அந்த வகையில் மலேசியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.
அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கும் நிலையில், அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அந்நாடு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
மேலும் மலேசியாவில் வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரம், பொது போக்குவரத்து, சமூக கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும் என அந்நாடு அரசு அறிவித்துள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்