ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும்….!! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
ரஷ்யா கடந்த 22 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய வருகிறது.இதனால் உக்ரைனில் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்லார்கள், பல இடங்கள் தரைமட்டமாகியுள்ளது, அதேசமயம் பல இடங்களை உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றியுள்ளது, பல நாடுகள் போரை நிறுத்தகூறியும் அது நிறுத்தவில்லை,மேலும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையும் ,பல கட்டுப்பாடுகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளன,
இந்த நிலையில் உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய உக்ரைன் உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதில் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ரஷியாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளோம். சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷியா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்