Breaking News

உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்- பிரதமர் மோடி

அட்மின் மீடியா
0

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், உக்ரைன் நிலவரம், இந்தியர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு, அரசு இயந்திரம் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள்அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback