வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்.... இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்...சென்னை வானிலை ஆய்வு மையம்...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதுஅடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
இதன்காரணமாக,இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும்,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்