அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் கடந்த பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜெயக்குமார் அவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது மேலும் கடுமையான நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவு
Tags: தமிழக செய்திகள்