Breaking News

9 நாள் போரில் இதுவரை ரஷ்ய வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

ராணுவ கட்டமைப்பில் சக்தி வாய்ந்த நாடான ரஷ்யா தன்னை விட சிறிய நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று எண்ணியிருந்த நிலையில், உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவத்துடன் சரிக்கு சரமமாக போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 


இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் உக்ரைனுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

அதே சமயம் ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் எட்டாததால் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய முப்ப்டைகளும் உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பக்கத்தில் இருந்தும்  தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடும் விதமாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் படைகள் முடிந்தவரை போராடி வருகிறது. தொடர் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ரஷ்யா வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback