உக்ரைன் மரியுபோல் நகரில் உள்ள மசூதி மீது ரஷ்யா குண்டு வீச்சு....80 பேர் நிலை?
உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரம் மரியுபோல் ஆகும் இந்த நகரை கைப்பற்றுவதற்க்காக வேண்டி ரஷ்ய ராணுவ முப்படைகளும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது என்றே கூறலாம், அங்கு உள்ள வீடுகள், மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டடங்கள் என தொடர் தாக்குதல் நடத்திவருகின்றது
தொடர் தாக்குதல் காரணமாக அங்கு உள்ள மக்கள் வெளியேற முடியவில்லை மேலும் மரியுபோல் நகரின் வடக்குப்பகுதி நுழைவு வாயிலான வோல்னோவாகாவை பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மரியுபோலில் நகரில் 80-க்கும் அதிகமான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி ஒன்றின் மீது ரஷ்ய படையினர் குண்டு வீசித்தாக்கியுள்ளதாக உக்ரைன் அரசின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாராவது கொல்லப்பட்டார்களா, யார் காமடைந்தார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்