Breaking News

மார்ச் 31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த செப்டம்பர் 13ம் தேதி, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 
 

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்டுள்ள நடைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 25 ஆம் தேதி முதல் நகை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 165 பேருக்கு நகையை திருப்பி வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, வரும் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டிலுள்ள 14.40 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback