Breaking News

சீனாவில் 133 பயணிகளுடன் விபத்திற்க்குள்ளான விமான விபத்து வீடியோ

அட்மின் மீடியா
0

சீனாவின் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் போயிங் 737 என்ற விமானத்தில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது

 

விமானம் டென்சியாங் என்ற பகுதியில் மலையில் விழுந்து நொறுங்கியதாகவும் விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது மீட்பு பணிகள் நடந்து வருகின்றது
 


சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்

இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும், விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/thenewarea51/status/1505874346652405760


Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback