Breaking News

வன்னியர் சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு கொடுத்த 10.5% இட ஒதுக்கீடு செல்லாது..உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியன்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தினை ரத்து செய்து.தீர்ப்பளித்திருந்தனர். 



இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் , தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் , தமிழ்நாடு சட்டத்துறை , தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி, சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு மீதான இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்றுஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

அந்த தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.55% சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியுள்ளது

10.55% சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback