கேன் குடிநீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..! உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு..!
அட்மின் மீடியா
0
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தகுந்த உரிமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஓட்டப்பட்டிருக்கும் லேபிள்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடிநீர் கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்