விரைவில் உங்களை மீட்டு விடுவோம்! கவலை படாதீர்கள் – உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் வீடியோ மூலம் தமிழக முதல்வர் உரையாடல்!
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் உரையாடினார். அதில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மாணவர்களிடம் சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். விரைவில் உங்களை மீது இந்தியா அழைத்து வந்து விடுவோம், தைரியமாக இருங்கள்.. அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருகிறோம் நம்பிக்கையுடன் இருங்கள் என கூறினார்
https://twitter.com/mkstalin/status/1497480918579113985
#Ukraine நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் உரையாடினேன். அவர்களைத் தாயகம் மீட்டுவர இந்திய அரசுடன் இணைந்து அன்னைத் தமிழ்நாடு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. pic.twitter.com/PsmCVT5O0H
— M.K.Stalin (@mkstalin) February 26, 2022
Tags: தமிழக செய்திகள்