முக்கிய அறிவிப்பு! உக்ரைனில் இருக்கும் தமிழர்கள் தொடர்புக்கு எண்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உக்ரைனில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேறும்படி அங்குள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்ட நிலையில் அங்கு பிப்ரவரி 22, 24 மற்றும் 26-ல் 3 விமானங்களை இயக்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் தமிழர்கள் http://nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.044 285152588 , 9600023645 ஆகிய எண்களில் உக்ரைனில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்