Breaking News

நான் ஒரு இந்து தீவிரவாதி என்று கூறியவர் கைது.....?

அட்மின் மீடியா
0

 தன்னை இந்து தீவிரவாதி என்று கூறி யுடியூப் சேனலில் அம்பேத்கர், பெரியார் குறித்து அவதூறாக பேசியவர் போலீசாரால் கைது 

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டது. இதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1 வார்டில் பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். 

இதுதொடர்பாக, அந்த வார்டில் தனியார் யூ டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. 

அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவர் பேசும்போது, தான் ஒரு இந்து தீவிரவாதி என்று கூறினார். மேலும் 

திராவிடஸ்தான் கேட்ட பெரியாரை, தலித்திஸ்தான் கேட்ட அம்பேத்கரை, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவை கொன்றிருக்க வேண்டும். அவர்களை கொன்ற பிறகு காந்தியை கொன்றிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கண்ணதாசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார் அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் அவரை இன்று கைது செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/VeeramanidDhar/status/1497100903718920192

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback