கொரானா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டயாமில்லை.. மத்திய அரசு..!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பொதுமக்களுக்கு ஆதார் கட்டயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கோவின்’ இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நடைமுறை செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கொண்டு வரச்சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமல்ல, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களிடம் ஆதார் அட்டை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்
Tags: இந்திய செய்திகள்