உக்ரைன் மீது அடுத்தடுத்து குண்டுவீச்ச.. பதற்றம் அதிகரிப்பு..
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வைத்திருப்பதால் போர் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் எல்லையோர மாகாணம் டானபஸ்ஸில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டானிட்சியா, லுகன்சா நகரில் நகரில் இருக்கும் ஒரு கிராமத்தில் திடீரென்று குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியின் கட்டிடம் முழுவதுமாக சேதம் அடைந்து இருக்கிறது. இந்த குண்டு வீச்சில்ஆசிரியர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது
ஆனால் இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ரஷியாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா உள்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளன.
Tags: வெளிநாட்டு செய்திகள்