5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை- வீடியோ வைரல் ஆனதால் சிறையிலடைப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்பாட்சா (32). இவரது மனைவி ரெஜினா பானு. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள் மேலும் மூத்த மகன் தாயுடனும், இளைய மகன் அர்சத் தந்தை சாதிக் பாட்சாவுடனும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு தந்தை சாதிக் பாஷா கொடூரமாக பெற்ற மகனை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தந்தை சாதிக் பாஷாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது மனைவி போனை எடுக்கவில்லை, இந்நிலையில் இளைய மகனை மட்டும் ரெஜினா சந்தித்ததால், ஆத்திரத்தில் சொந்த மகனை தாக்கியதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
சாதிக்பாட்சாவை கைது செய்த போலீசார், சிறுவனை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சாதிக்பாட்சாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
https://twitter.com/salahudeentntj/status/1497101589504413699
Tags: தமிழக செய்திகள்