அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாய்ந்தது 3 வது வழக்கு
திமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் சிறையில் உள்ள ஜெயக்குமார் மூன்றாவதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.அதன்பின்பு சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி சிறையிலுள்ள அவர் 2 வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் 2வது வழக்கில் ஜாமின் வழங்கபட்டநிலையில் முதல் வழக்கில் ஜாமீன் மனுவை தள்லுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயக்குமார் ,மகள் ஜெயப்பிரியா ,மருமகன் நவீன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்