Breaking News

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை - அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டில்  21 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் இறந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 



இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த குண்டு வெடிப்பை இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் நடத்தியது தெரிந்தது. 

இது தொடர்பாக போலீசார் 85 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு  நீதிபதி ஏ.ஆர்.படேல்,அவர்கள் 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார்,மேலும். 28 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். 

குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து இன்று (பிப்.,18) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback