Breaking News

பஜ்ரங்தள் நிர்வாகி கொலை..கர்நாடகாவில் பதற்றம் 144 தடை அமல்....

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் வசித்து வந்த இந்துத்துவ அமைப்பான பஜ்ரங்தள்ளை சேர்ந்த ஹர்சா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இச்சம்பவத்தால் கர்நாடக மாநிலத்தில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது. 



 இந்த பதட்டத்தை தணிக்க பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஹர்ஷாவின் உடல் வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்கர்நாடகா.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சி.வி. நகரில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது திடீரென கடைகள், பேருந்துகள் , கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டன. உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback