Breaking News

கர்நாடகாவில் 144 தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 10 மாணவிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள அரசு ராணி ஜூனியர் பி யூ கல்லூரியில் பயிலும் மாணவிகள் கடந்த புதன்கிழமையன்று பர்தா அணிந்து வந்ததால் உள்ளே அனுமதிக்கப்பட்டவில்லை. தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்காததை கண்டித்து முழக்கமிட்டபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் பேரணியாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.



அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவிகள் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனினும் , மாணவிகளின் பெயர்கள் எதுவும் புகாரில் குறிப்பிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.என்று ABPLIVE  கூறியுள்ளது.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback