Breaking News

இனி தமிழகத்தில் ஆவின், மின்வாரியம், போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் தேர்வு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆவின், மின்வாரியம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பணியிடங்கள் இனி TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 


அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமான சேர்க்கையானது நடைபெறும்.

விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்தத் தன்மையை கொண்டு வரும் மற்றும் அத்தகைய பணிகளுக்கு, மாநிலத்தின் கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குப் புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயலச் செய்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அத்தகைய ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதின் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் நிபுணத்துவத்தை பேண முடியும் மற்றும் இது, மேலும் அத்தகைய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு தொடர்பான, இக்கட்டான வேலைகளிலிருந்து விடுவித்து அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்குகிறது.

எனவே, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 321 ஆம் உறுப்பில் வழங்கியவாறு ஒரு சட்டத்தினை மேற்கொள்வதன் மூலம், TNPSC-யிடம் ஒப்படைக்க, அரசானது முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback