கொரானா,ஒமிக்ரான், அடுத்து புளோரோனா புதுவகை வைரஸ் கண்டுபிடிப்பு........
2020 ம் ஆண்டு கொரானாவைரஸ், பரவியது, 2021ம் ஆண்டு , டெல்டா, மற்றும் ஒமைக்ரான் பரவியது 2022 ம் ஆண்டு துவக்கத்தில் புளோரோனா எனும் வைரஸ்...கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முதலில் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ்
பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர்
உயிரிழந்துள்ளனர். அதனை அடுத்து கொரானா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இதனை அடுத்து ஊரடங்கு ,கட்டுபாடுகள் மற்ரும்
தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு
படிப்படியாகக் குறைந்தது
இதனை அடுத்து கொரானா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா , டெல்டாபிளஸ், எனவும் பரவியது அதன்பின், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தோன்றியது. மேலும்,. இந்தியா உள்பட 90 நாட்களுக்கு மேல் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் சுகாதார துறை தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் வேமகாக பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலினால் உலக நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ள இந்த நிலையில், தற்போது இஸ்ரேலில் புதிதாக உருமாற்றம் அடைந்த கோவிட் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் அறிகுறிகளுடன், இன்புளூயன்ஸா வைரசும், கோவிட் வைரசும் சேர்ந்து இருப்பதால், அதற்கு புளோரோனா வைரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்