நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
தேர்தலை 4 முதல் 6 வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.மேலும், கொரோனா தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்