கின்னஸ் சாதனையில் துபாய் தண்ணீர் பூங்கா!!
அட்மின் மீடியா
0
துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடற்கரையில் இருந்து 328 அடி தொலைவில் கடல் தண்ணீரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவின் நீளம் சுமார் 252 அடிகள். 115 அடி அகலத்தில் கடல் நீரில் மிதந்து கொண்டு இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா 3 மடங்கு அளவில் 42400 சதுர மீட்டரில் மிக பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்