Breaking News

முழு ஊரடங்கான ஜனவரி 9 அன்று திருமண விழாவிற்கு செல்ல அனுமதி: தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

 


 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தமிழகத்தில் ஊரடங்கு நாளான நாளை திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளை அரசு தேர்வுகள் எழுத செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback