5 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாஸ்க் அவசியமில்லை! மத்திய அரசு புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. அந்த வகையில்
மத்திய சுகாதார அமைச்சகம் ஐந்து வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளுக்கு முக கவசம் அணிய தேவையில்லை என்றும் 6 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர்களின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பாகவும், சரியான முறையில் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.என்றும்குழந்தையின் திறனைப் பொருத்து மாஸ்க் அணியலாம் என்றும், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் போன்ற அதே நிலையில் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்