BREAKING தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிவிப்பு முழு விவரம்.....
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு தினத்தன்று, அதாவது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
ஜனவரி 3ம் தேதியிலிருந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறை ரத்து வழக்கம் போல் இயல்பாக செயல்படும்
கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்
.அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
எனவ முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் அறிவிப்பு முழு விவரம்.....
https://drive.google.com/file/d/11WLSm7YtBbZnmOE-J7uu54A9riZp4r3n/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்