Breaking News

சிறுபான்மை மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் - என்னென்ன தகுதிகள்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் 

தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ.1,00,000/ ஆக இருத்தல் வேண்டும்.

20 வயது முதல் 45 க்குள் இருக்கவேண்டும்

கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறுபான்மை நல அலுவலகத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்





Tags: தமிழக செய்திகள்

Share this