ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு..! – இந்திய விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிபின் ராவத் மரணம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.’ என பதிவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்