Breaking News

தனியார் நூற்பாலையில் வடமாநில பெண் மீது கொடூர தாக்குதல்... இருவர் கைது

அட்மின் மீடியா
0

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் தங்கியிருந்த விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

 


அந்த பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இந்த சம்பவம் நடைபெற்ற தனியார் ஆலை அடையாளம் காணப்பட்டு இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விடுதி வார்டன் லதா மற்றும் மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைதுசெய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback